எம்ஜிஆர் புகார் முதல் சர்க்காரியா கமிஷன் வரை: 28 குற்றச்சாட்டுகள்
எம்ஜிஆர் கொடுத்த புகாரின் பேரில் அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன், திமுக அரசு மீதான சுமார் 28 குற்றச்சாட்டுகளை விரிவாக விசாரிக்க முடிவு செய்தது.
முழு காணொளி: 106 நொடி YouTube-ல் பார்க்க
1975 ஜூனில் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. அதை எதிர்த்த திமுக ஆட்சி பின்னர் கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு இந்திரா காந்தியிடம் இருந்த அடுத்த ஆயுதம், எம்ஜிஆர் கொடுத்த புகார். அது அரசியல் பழிவாங்கலாகவே இருக்கட்டும் என்ற மனநிலையில், அந்தப் புகாரை விசாரிக்க ஒரு நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அதுதான் சர்க்காரியா கமிஷன்.
ஆனால் நீதிபதி சர்க்காரியா, நான்கு பேரைப் பார்த்துவிட்டு அறிக்கை எழுதுவதோடு நிற்கவில்லை. விரிவாக விசாரிக்க முடிவு செய்தார். சுமார் 28 குற்றச்சாட்டுகள் இருந்தன. ஒவ்வொருவரிடமிருந்தும் கோப்புகள், வாக்குமூலங்கள், ஆதாரங்களை அவர் திரட்டினார்.
இது அரசியல் பழிவாங்கல் மட்டும்தானா, அல்லது திமுக மீதான குற்றச்சாட்டுகள் வெளிவந்தனவா? சர்க்காரியா கமிஷனை அமைத்தது தான் அல்ல என்று எம்ஜிஆர் பின்னர் சொன்னாரா? "விஞ்ஞான ஊழல்" என்ற சொல் கமிஷனில் இடம்பெற்றதா? இனி விசாரணைக்கு வரமாட்டேன் என்று கருணாநிதி சொன்னதும், அதன் பிறகு நடந்ததும் என்ன? இவை இந்தத் தொடரின் மூன்றாம் பாகத்தில்.